1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2019 (16:01 IST)

காலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி:பள்ளிக்கல்வித் துறை விளக்கம்

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ரத்து என்று பரவிய செய்தி வதந்தி என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் தற்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் காந்திய சிந்தனைகள் தொடர்பான வகுப்புகளை நடத்துமாறு உத்தரவிடப்பட்டிருப்பதால் காலாண்டிற்கு விடுமுறை ரத்து என செய்திகள் பரவின.

இதனையடுத்து தற்போது காலாண்டு விடுமுறை ரத்து தொடர்பான தகவலை பள்ளிக்கல்வித் துறை மறுத்துள்ளது. மேலும், அறிவிக்கப்பட்டிருந்த காலாண்டு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் கூறியுள்ளது. அதே போல் காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம் எனவும் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.