திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2023 (16:27 IST)

10ஆம் வகுப்பு மாணவனை அடித்தே கொலை செய்த சக மாணவர்கள்: முசிறியில் பரபரப்பு..!

murder1
10ஆம் வகுப்பு மாணவனை அடித்தே கொலை செய்த சக மாணவர்கள்: முசிறியில் பரபரப்பு..!
முசிறி பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவனை அவனுடன் படிக்கும் சக மாணவர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் பால சமுத்திரம் என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மெபுலீஸ்வரன் என்பவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கும் சக மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மெபுலீஸ்வரனை சக மாணவர்கள் இணைந்து தாக்கியதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் சக மாணவர்கள் தாக்கியதில் மெபுலீஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இறந்த மாணவனின் உறவினர்கள் பள்ளி முன்பு சாலை மறியல் செய்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மாணவரின் கொலை தொடர்பாக முசிறி டிஎஸ்பி யாஸ்மின் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் மாணவனை தாக்கிய சக மாணவர்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva