1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 23 ஜூலை 2020 (07:50 IST)

10ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
 
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டது. மேலும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரம் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் அவர்களுக்கும் அடுத்த மாதம் மதிப்பெண் பட்டியல் வழங்க என்று தெரிவித்துள்ளார்