வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (10:06 IST)

ஒரு வருடத்தில் 1040 விபத்து உயிர்பலி.. தமிழகத்தில் முதல் இடம் பெற்ற மாவட்டம் எது?

Accident
தமிழ்நாட்டில் மாவட்ட அளவில் அதிகமான விபத்து மற்றும் உயிர்பலி ஏற்பட்ட மாவட்டங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.



மக்களிடையே இருசக்கர வாகனங்கள், கார் வாங்குவதற்கான வசதி முன்பை விட அதிகரித்துள்ள நிலையில் சாலையில் போக்குவரத்து நெரிசலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக மாவட்டங்களில் விபத்தினால் கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் கடந்த ஆண்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் 3,642 சாலை விபத்துகளில் 1040 பேர் பலியாகியுள்ளனர். கோவைக்கு அடுத்தப்படியாக 912 உயிர் பலிகளோடு செங்கல்பட்டு இரண்டாவது இடத்திலும், 876 விபத்து பலி எண்ணிக்கையோடு மதுரை மூன்றாவது இடத்திலும் உள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரமும், அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரமாகவும் உள்ள சென்னை பட்டியலில் 500 உயிர் பலிகளோடு 15வது இடத்தில் உள்ளது. சென்னையிலும் கோவைக்கு நிகராக ஒரு ஆண்டில் 3,642 சாலை விபத்துக்கள் நடந்திருந்தாலும் பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது.

Edit by Prasanth.K