வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (15:26 IST)

சென்னையில் 100 கடைகளுக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள்: பெரும் பரபரப்பு!

சென்னையில் உள்ள 100 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் திடீரென சீல்வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னையில் தடை செய்யப்பட்ட பான், குட்கா போன்ற பொருட்களை கடைகளில் விற்பனை செய்யக்கூடாது என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எனக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர் 
 
ஆனால் எச்சரிக்கையை மீறி பல கடைகளில் பான் குட்கா விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிக்கு புகார் வந்தது 
 
இந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுகிறதா என சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் 100 கடைகளில் பான் குட்கா விற்பனை செய்யபப்ட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது
 
 மேலும் பான், குட்கா போன்ற போதை பொருட்கள் 11 டன்கள் பறிமுதல் செய்ததாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.