செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 18 டிசம்பர் 2021 (07:21 IST)

சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்வா?

சென்னையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்துவரும் நிலையில் இன்றும் உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
இதனால் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்னும் ஒரு சில மாதங்களில் மேற்கு வங்கம், கோவா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன 
 
ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.