புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 16 நவம்பர் 2018 (11:51 IST)

தலா 10 லட்சம் நிவாரண நிதி; முதல்வரின் அதிரடி உத்தரவு

கஜா புயலில் உயிரிழந்தவர்வர்களுக்கு தலா 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை கடந்த கஜா புயலால் திருவாரூர், தஞ்சை, நாகை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழக அரசின் சிறப்பான முன்னேற்பாடுகளால் புயலின் மையப்பகுதி கரையை கடந்ததும் மீட்புப்பணிகள் தொடங்கிவிட்டன
 
சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் அனைத்தும் மின்னல் வேகத்தில் அகற்றப்பட்டு வருகிறது. கஜா புயல் தாக்கத்தால் தஞ்சையில் 5 ஆயிரம் மின்கம்பங்களும், நாகையில் 4 ஆயிரம் மின்கம்பங்களும், திருவாரூரில் 3 ஆயிரம் மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளது.
 
பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கஜா புயல் தாக்குதலால் தமிழகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.