பொங்கல் பயணம்; 1.62 லட்சம் பேர் முன்பதிவு! கூடுதல் பேருந்து இயக்கப்படுமா?
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல லட்சக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வருவதால் முந்தைய தினங்கள் விடுமுறையாக இருப்பதால் பலரும் சொந்த ஊர்களுக்கு 12, 13ம் தேதிகளிலேயே புறப்பட தயாராகி வருகின்றனர்.
சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல இருப்பதால் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை 3 நாட்களுக்கு சென்னையிலிருந்து பல்வேறு வழித்தடங்களிலும் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை 1.62 லட்சம் பேர் பயணிப்பதற்காக முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மேலும் பயணிகளின் வருகைக்கு ஏற்ப அந்த சமயம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit By Prasanth.K