ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 4 ஜனவரி 2023 (08:17 IST)

சாலையோர மக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கிய நயன்தாரா: எழும்பூரில் பரபரப்பு

nayanthara
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்ததே. அவரது திருமணதின்போது தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்கள் மற்றும் சிறுவர் இல்லங்களில் இலவசமாக உணவு பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சாலையோரம் உள்ள மக்களுக்கு திடீரென பரிசுகளை வழங்க நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எழும்பூர் ரயில் நிலையம் அருகே சாலையோரம் குடியிருக்கும் மக்களுக்கு அவர் பரிசுப் பொருட்களை வழங்கினார். பொங்கல் திருநாளை முன்னிட்டு அவர் இந்த பரிசு பொருளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
நயன்தாராவிடம் இருந்து பரிசு பொருளை வாங்க சாலையோர மக்கள் முண்டியடித்ததால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது
 
Edited by Siva