1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 28 நவம்பர் 2018 (08:37 IST)

பள்ளிக்கூடத்தை லாட்ஜாக்கிய தலைமை ஆசிரியர்: செருப்படி கொடுத்த மக்கள்

கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரத்தில் பள்ளிகூடத்தை லாட்ஜாக்கிய தலைமை ஆசிரியரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக  பணியாற்றி வந்தவன் சுதாகர். இவனது நண்பன் சுப்பையா. இவனும் ஒரு ஆசிரியர். சுப்பையா மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளான்.
 
இந்நிலையில் இருவரும் இளம்பெண்ணை பள்ளிக்கு அழைத்து வந்து உல்லாசமாக இருக்க முடிவு செய்தனர். அதன்படி இளம்பெண் ஒருவர் தன் மகனுடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றார்.
தனது மகனை வெளியே விட்டுவிட்டு அறைக்குள் சென்ற இளம்பெண் கதவை பூட்டிக்கொண்டார். இதனால் வெளியே இருந்த சிறுவன் அழத்தொடங்கியுள்ளான். இதனால் வெளியே காவலுக்கு இருந்த சுப்பையா சிறுவனை அழைத்து சென்று திண்பண்டங்கள் வாங்கிக் கொடுத்துள்ளான்.
 
அப்போது சிறுவன் தன் அம்மாவை பள்ளியில் அறையில் வைத்து பூட்டிவிட்டார்கள் என கத்தி அழத்தொடங்கினான். இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியரின் கதவை உடைத்து பார்த்தபோது சுதாகரும் அந்த இளம்பெண்ணும் உல்லாசமாக இருந்தததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
 
இதனையடுத்து அந்த இரண்டு பொறுக்கிகளுக்கும் தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.