செவ்வாய், 8 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Muthukumar
Last Updated : செவ்வாய், 8 ஏப்ரல் 2014 (14:42 IST)

ஏப்ரல் 24ல் சம்பளத்துடன் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 24-ம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 
தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 24-ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. 
 
1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 135-ன் அடிப்படையில், தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் (ஐடி நிறுவனங்கள் உட்பட), உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த பணியாளர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களுக்கும் தேர்தல் நாளான ஏப்ரல் 24-ம் தேதி (வியாழக்கிழமை) வாக்களிக்க ஏதுவாக, சம்பளத்துடன் கூடிய ஒருநாள் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 
 
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.