ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 அக்டோபர் 2024 (19:50 IST)

வாடிக்கையாளர் கேன்சல் செய்த கேக்கை சாப்பிட்ட 5 வயது குழந்தை உயிரிழப்பு: அதிர்ச்சி சம்பவம்..!

ஸ்விகியில் டெலிவரி ஊழியராக பணியாற்றும் ஒருவர், வாடிக்கையாளர் கேன்சல் செய்த கேக்கை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அந்த கேக்கை தனது ஐந்து வயது குழந்தைக்கு கொடுத்த நிலையில், அந்த கேக்கை சாப்பிட்ட குழந்தை திடீரென உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டது.

இதனை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி, குழந்தை உயிரிழந்தது. இது குறித்து பேசிய ஸ்விக்கியின் செய்தி தொடர்பாளர், “இந்த சம்பவம் துரதிஷ்டமானது. எங்கள் மனம் உடைந்து உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து விசாரணை நடத்த இருப்பதாகவும், அதிகாரிகளின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Edited by Siva