வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 அக்டோபர் 2024 (19:45 IST)

பாசிச சக்திகளுக்கு எதிரான வெற்றி: வினேஷ் போகத்துக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து..!

Vinesh Phogat
ஹரியானா மாநில தேர்தலில் போட்டியிட்ட மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெற்றி பெற்ற நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீராங்கனை, வினேஷ் போகத், ஹரியானா மாநிலத்தில் உள்ள ஜூலானா என்ற தொகுதியில் போட்டியிட்ட நிலையில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் யோகேஷ் குமாரை விட 6,015 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

இதன் மூலம், 19 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், முதல்முறையாக தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியிருக்கும் வினேஷ் போகத்திற்கு, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை மற்றும் ஹரியானாவின் ஜுலானா தொகுதியில் வெற்றி பெற்ற வினேஷ் போகத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்கள் பிரதிநிதியாக மக்கள் சேவையின் இந்த புதிய அத்தியாயத்தில் உங்கள் வெற்றி மகத்தான வெற்றி என வாழ்த்துகிறேன். பாசிச சக்திகளுக்கு எதிரான வெற்றி பெற்ற உங்கள் ஆற்றல் அனைவருக்கும் உந்து சக்தியாக தொடரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Edited by Siva