ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 அக்டோபர் 2024 (19:20 IST)

ஹரியானா முடிவுகளை ஏற்க முடியாது, இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி காங்கிரஸ்

Jairam Ramesh
ஹரியானா மாநில தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்றும், இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். 
 
ஹரியானாவில் கடந்த ஐந்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடந்த போது காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், திடீரென நிலைமை மாறி, பாஜக 48 தொகுதிகளில் முன்னிலை வகித்த நிலையில், அக்கட்சி ஆட்சி அமைப்பது உறுதி ஆகி உள்ளது. 
தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் நிலையில், இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், ஹரியானா தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்றும், இது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளார். 
 
அடிப்படை எதார்த்தத்திற்கு எதிரான முடிவு கிடைத்துள்ளது என்றும், தேர்தல் முடிவுகள் மாநில மக்களின் விருப்பத்திற்கு எதிரானது என்றும், மூன்று மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும், இது ஜனநாயக செயல்முறைக்கு கிடைத்த தோல்வி என்றும் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran