நடிகை ரோஜா சஸ்பெண்ட் ரத்து செய்யக்கோரி ஜனாதிபதியிடம் மனு
ஆந்திர சட்டசபையில் நடிகை ரோஜா சஸ்பெண்ட் ரத்து செய்யக் கோரி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆந்திர சட்டசபையில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் செக்ஸ் விவகாரம் குறித்து, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா, ஆபாசமாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து, சட்ட சபைக்குள் ஒரு வருடத்துக்கு நுழையக்கூடாது என்று நடிகை ரோஜாவுக்கு ஆந்திர சபாநாயகர் கொட்லா சிவபிரசாத் தடை விதித்தார்.
இதனால், வெகுண்டு எழுந்த, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ்,ஹஐதராபாத் வந்துள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் ஒரு மனு அளித்தனர். அதில், ஆந்திர சட்டசபையில் ரோஜா சஸ்பெண்ட்டை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.