அன்று நீ குடை விரித்ததற்காக கோபித்துக் கொண்டு நின்று விட்ட மழையைப் பார்த்தவனாகையால் இன்று சட்டென்று மழை நின்றால் நீ எங்கோ குடை விரிப்பதாகவே நினைத்துக் கொள்கிறேன். --------------------------------- நீ யாருக்கோ செய்த மௌன அஞ்சலியைப் பார்த்ததும்.. எனக்கும் செத்துவிடத் தோன்றியது. --------------------------------- எனக்கு லீப் வருடங்களைத்தான் ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது. அந்த வருடங்களில்தான் இன்னும் ஒரு நாள் அதிகமாக வாழலாம் உன்னோடு. ------------------------ நீ எந்த உடையிலும்...