பிப்ரவரி 2021 - எண்ணியல் பலன்கள்: 8, 17, 26
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...
பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணமுடைய எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து தாமதப்பட்டாலும் கையில் இருப்பு இருக்கும். வேளை தவறி சப்பிட வேண்டி இருக்கும். முக்கியமான பணிகள் தாமதமாக நடக்கும்.
வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. உடல் ஆரோக்கியம் அடையும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடின உழைப்புக்குப் பின் முனனேற்றம் அடைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள்.
குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பெறும். அரசியல்துறையினருக்கு நிதி நிலைமை சீர்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.
பரிகாரம்: தினமும் ராம நாமம் சொல்லி ஆஞ்சநேயரை வணங்குவதால் வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும்.