ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 3, 12, 21, 30

Last Updated: புதன், 31 ஜூலை 2019 (15:19 IST)
ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...


நேர்மையாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ளும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனதில் இருந்த வீண்கவலை நீங்கும். வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து வந்த வீண் மனஸ்தாபங்கள் அகலும். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன்  உண்டாகலாம். எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பிரச்சனை குறையும். பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். அரசியல்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை யோசித்தும் திட்டமிட்டும் செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
 
பரிகாரம்: முருகனை வணங்கி வர முன்ஜென்ம பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.


இதில் மேலும் படிக்கவும் :