ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 1, 10, 19, 28

Last Updated: புதன், 31 ஜூலை 2019 (15:18 IST)
ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...


மனதில் தைரியமும் வீரமும் கொண்ட ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரவு அதிகமாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சுபச்செலவுகள் ஏற்படும். வம்புச்சண்டைகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். கொடுத்த வாக்குறுதியை நீங்கள் காப்பாற்ற முடியும். மற்றவர்களுக்கு உங்கள் மீது இருந்த கோபம் குறையும்.

தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக  தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அரசியல்துறையினருக்கு காரிய வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.
 
பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.


இதில் மேலும் படிக்கவும் :