1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By
Last Updated : புதன், 31 ஜூலை 2019 (15:19 IST)

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள்: 2, 11, 20, 29

ஆகஸ்ட் மாத எண் ஜோதிடப் பலன்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...


ஈரமனம் கொண்ட இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் சுபச் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் இருந்த மனகஷ்டம் நீங்கும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியத்திலும் இருந்த மந்த நிலை மாறும். எதிர்ப்புகளை சமாளிக்கும் திறமை அதிகரிக்கும்.

தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் அறிவுத் திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள்.

பெண்களுக்கு எதிர்பாராத சுபச்செலவுகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசியல்துறையினர் தங்களது வாக்கு வன்மையால் எதையும் சாதித்துக் கொள்வீர்கள். புதிய பதவி - புதிய பொறுப்புகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்:  பெருமாளை வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.