வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (18:55 IST)

ஏப்ரல் 2021 - 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு....

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
தனது நேர்மையான நடவடிக்கையால் அனைவரையும் தன்வசப்படுத்தும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண்குழப்பம் ஏற்படும். பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக  பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை.

தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

பெற்றோர் வழியில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். பெண்களுக்கு வரவும் செலவும் சரியாக இருக்கும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அரசியல் துறையினர் வளர்ச்சி பெற மிகவும் கவனமாக  இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை  நன்கு படிப்பது நல்லது.
 
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர்குரு கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.