வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 ஏப்ரல் 2021 (18:43 IST)

ஏப்ரல் 2021 - 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
எந்த செயலையும் வேகத்துடன் விவேகமாக செய்யும் நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் பலவகையான யோகம் உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்.

தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும்.

பெண்கள் துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.
 
பரிகாரம்:  திங்கட்கிழமைகளில் மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.