ஏப்ரல் 2021 - 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

Sugapriya Prakash| Last Modified வியாழன், 1 ஏப்ரல் 2021 (18:53 IST)
8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு... 

 
நேர்வழியில் சென்று காரியங்களை சாதிக்கும் எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும்.

தொழிலை விரிவு படுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும்.

பெண்களுக்கு புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். அரசியல்துறையினருக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
 
பரிகாரம்: வினாயகருக்கு சனிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.


இதில் மேலும் படிக்கவும் :