சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ஸ்ரீ நந்தனார் நாயனாரின் வீதிஉலா.. பக்தர்கள் பரவசம்..!
சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நடைபெறவுள்ள மார்கழி ஆருத்ரா தரிசன பெருவிழாவை முன்னிட்டு, நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீ நந்தனார் நாயனாரின் வீதிஉலா சனிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் அமைந்துள்ள சௌந்தரநாயகி சமேத சிவலோகநாதர் ஆலயத்திலிருந்து நந்தனாரின் திருவுருவச் சிலை ஊர்வலமாக புறப்பட்டது.
இந்த ஊர்வலம் தெற்கு சன்னதியை அடைந்து, அங்கிருந்து நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் மடத்தைச் சென்றடைந்தது.
கீழச் சன்னதி பகுதியில் ஊர்வலம் வந்தபோது, பொது தீட்சிதர்கள் சார்பில் ஸ்ரீ நந்தனாருக்குச் சிறப்பு மரியாதைகள் செய்யப்பட்டன.
ஆருத்ரா தரிசன உற்சவத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த ஊர்வலம், ஆன்மீக பெருமையை பறைசாற்றும் வகையில் அமைந்தது.
Edited by Mahendran