Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன் செய்ய வேண்டுமா...?

Written By Sasikala
Updated: வெள்ளி, 24 ஜூலை 2020 (15:09 IST)
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தனியா தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மிளகு - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:
 
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலந்து, ஃபிரிட்ஜில் 30  நிமிடங்கள் வைக்கவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் ஊறவைத்துள்ள சிக்கனை சேர்த்து பிரட்டி, அடுத்ததாக தனியா பொடி, இடித்த மிளகுப் பொடி சேர்த்து சிறு தீயில்  கிளறி விடவும். இறுதியாக கால் கப் தண்ணீர் ஊற்றி வேகவையுங்கள்.
 
பின்னர் தண்ணீர் வற்றி சிக்கன் மென்மையாக வேகும்வரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கிவிடுங்கள். பரிமாறும்போது ஒரு  ஸ்பூன் எலுமிச்சை தூவி பிரட்டிவிட்டுப் பரிமாறுங்கள். சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன் தயார்.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments