செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

நெத்திலி கருவாட்டு தொக்கு செய்ய....!

தேவையான பொருட்கள்:
 
நொத்திலி கருவாடு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 12 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
 
முதலில் கருவாட்டை சுத்தம் செய்து வெதுவெதுப்பான நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து,  அதில் எண்ணெய் ஊற்றி காயந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
 
பின்பு அதில் சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளியை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
இறுதியில் கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் வரை பிரட்டி, சுவைகேற்ப உப்பு சேர்த்து, சுவை பார்த்து இறக்கினால், ருசியான நெத்திலி கருவாட்டு தொக்கு தயார்.