ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

மிளகு இறால் மசாலா செய்வது எப்படி....?

தேவையான பொருட்கள்:
 
இறால் - 1 கப்
வெங்காயம் - 2
தக்காளி - 2 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1  ஸ்பூன்
சீரகத் தூள் - 1  ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
எண்ணெய் - 2 ஸ்பூன்
மிளகு - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லி - அலங்கரிக்க
கடுகு - தாளிக்க
 
செய்முறை:
முதலில் மிளகை மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாக அடித்து (பொடியாக) வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சேர்த்து தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து வதக்கவும். இவை அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் தனியா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். பின் இறால் சேர்த்து  நன்றாக கலந்து விடவும். தண்ணீர் சேர்த்து இறாலை 10 நிமிடங்கள் வரை வேக விடவும். இறால் வெந்தவுடன் மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து 2  நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்துமல்லி தூவி இறக்கவும். சுவையான மிளகு இறால் மசாலா தயார்.