சுவை மிகுந்த பிங்கர் சிக்கன் செய்வது எப்படி...?

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (19:01 IST)
தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ (1 இஞ்ச் நீளமான எலும்பில்லாத கறி)
முட்டை - 1
தயிர் - 1 கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மைதா - 1 கப்
பிரட் தூள் - 1 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
கேசரி கலர் - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். பின் அதில் தயிர், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு போட்டு கலக்கிக் கொள்ளவும்.

பின் சிக்கனை நன்கு கழுவி அந்த கலவையில் போட்டு பிரட்டி வைத்து, 3 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.

பின்னர் ஒரு சிறு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் பேக்கிங் பவுடரை நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.

பின்னர் வடிகட்டிய அந்த சிக்கன் துண்டுகளை மைதா கலவையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு பொரித்த சிக்கனை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி பரிமாறவும். வேண்டுமென்றால் அதன் மேல் எலுமிச்சைப்பழ சாற்றை பிழிந்து சாப்பிடலாம்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments