செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. அசைவம்
Written By

இப்படி செய்து பாருங்கள் கோழிக் குழம்பு!!

தேவையான பொருட்கள்:
 
கோழிக்கறி (சிக்கன்) - அரை கிலோ
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பூண்டு - 6
தேங்காய் - 2 சில்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
தினியா தூள் - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
பட்டை - ஒன்று
கிராம்பு, இலை - ஒன்று
கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: 
 
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய  பச்சைமிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லித் தழை போட்டு வதக்கவும்.
 
மிளகு, சீரகம், சோம்பு மஞ்சள் தூளுடன் அரைத்து, இதனுடன் பூண்டு, சிறிது இஞ்சி, பாதி வெங்காயம் சேர்த்து அரைக்கவும். வதங்கியவற்றுடன் கோழியையும் சேர்த்து கிளறி அரைத்த மசாலாவுடன் மிளகாய் தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும். தேங்காயுடன் 4  பல் பூண்டு சேர்த்து அரைக்கவும். குழம்பு கொதித்து கோழி வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான் கோழிக்  குழம்பு தயார்.