1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ஜெயலலிதா கை காட்டுபவர்களே பிரதமர்: ராமராஜன்

ஈரோடு செ‌ய்‌‌‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

ஜெயலலிதா ராமராஜன் ஈரோடு திருப்பூர்
அ.இ.அ.தி.மு.க. பொது‌ச் செயலர் ஜெயலலிதா யாரை ைகாட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர் என நடிகர் ராமராஜன் பேசினார்.

திருப்பூர் ம‌க்களவை அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் சிவசாமியை ஆதரித்து நடிகர் ராமராஜன் ஈரோடு மாவட்டம் பவானியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பே‌சிய அவ‌ர், வரும் ம‌க்களவை தேர்தலில் தமிழகம், பாண்டிச்சேரியில் உள்ள நாற்பது தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி அமோகமாக வெற்றிபெறும். இதன்பின் அ.இ.அ.தி.மு.க. பொது‌ச் செயலர் ஜெயலலிதா யாரை கை காட்டுகிறரோ அவரே இந்தியாவின் பிரதமராக முடியும்.

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் 40 தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும் என்று தெரிவித்துள்ளார். அவரது ஜோதிடம் கட்டாயம் பலிக்கும் என ராமராஜன் பேசினார்.