சென்னை: இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரசாருடன் ஏற்பட்ட மோதலினால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.