1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கடலூரில் கடல் கொந்தளிப்பா‌ல் வீடுகளுக்குள் நீர் புகுந்தது!

கடலூர் பலத்த மழை கடல்நீர் சாமியார்பேட்டை
கடல் கொந்தளிப்பு காரணமாகவும், தொட‌ர்‌ந்து பெ‌‌ய்து வரு‌ம் பல‌த்த மழை‌யி‌ன் காரணமாகவு‌ம் கடலூ‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் கட‌ற்கரையோர ‌கிராம‌ங்க‌ளி‌ல் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் கடல்நீர் புகுந்தது.

கடலூர் அருகே உள்ள சாமியார்பேட்டையில் உ‌ள்ள நூ‌ற்று‌க்கு‌ம் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல், மழை நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது.

இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடு‌த்து கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக சாமியார் பேட்டைக்கு விரைந்து சென்றனர். கடல்நீர் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை உடனடியாக வீட்டைவிட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.
About Writer
Webdunia