போரை நிறுத்த ராஜபக்சேயிடம் பிரதமர் வலியுறுத்த வேண்டும் : கி. வீரமணி!
இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம், இலங்கையில் போர் நிறுத்தம், நிரந்தர அமைதியை பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தவேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போர் நிறுத்தத்திற்கு தயார் என்று விடுதலைப்புலிகள் அறிவித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. முதல்வர் கருணாநிதி எடுத்த அயராத முயற்சிக்கு விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து ஏற்பட்ட சாதகமான விளைவு இது என்றே சொல்லலாம்.
13ஆம் தேதி நம்முடைய பிரதமரை சந்திக்க வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் எடுத்துக்கூறி வற்புறுத்த வேண்டும். போர் நிறுத்தம், நிரந்தர அமைதி திரும்புதல் இவை பிரதமரால் வற்புறுத்தப்பட்டு அரசியல்தீர்வு அங்கு உருவாக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
| |
|