1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

திருப்பூருடன் இணைய எதிர்ப்பு: உடுமலைப்பேட்டையில் போராட்டம்!

உடுமலைப்பேட்டை தாலுகா எதிர்ப்பு அஇஅதிமுக
உடுமலைப்பேட்டை தாலுகாவை புதிதாக உருவாகியுள்ள திருப்பூர் மாவட்டத்துடன் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு அருகே ஆயிரக்கணக்கான மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநில அரசின் முடிவைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குப் அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை தாங்கினார்.

திருப்பூருடன் உடுமலைப்பேட்டையை இணைத்தால், அதன் சுற்றுப்புற சூழல் பாதிப்புக்குள்ளாகும் என்றும், எனவே கோவை மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரினர்.
About Writer
Webdunia