1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ர‌யி‌ல் ம‌றிய‌ல் : சென்னையில் 200 பேர் கைது!

ர‌யி‌ல் ம‌றிய‌ல் சென்னை இடதுசாரி கட்சிகள்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து இன்று தமிழகம் முழுதும் இடதுசாரிக் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் ரயில் மறியலில் ஈடுபட்ட இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த 200 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

திருவொற்றியூர், அம்பத்தூர் மற்றும் கிண்டி ரயில் நிலையங்களில் ரயில் மறியல் செய்த இவர்கள் கைது செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை கூறியுள்ளது.

இதற்கிடையே சென்னையில் உள்ள அயனாவரம் பகுதியில் இரண்டு அரசு பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தியதில் கண்ணாடிகள் உடைந்தன. ஆனால் இதில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
About Writer
Webdunia