செல்பேசியால் சோகம் : முதியவர் சாவு, பேசியவர் கவலைக்கிடம்!
மொட்டை மாடியில் செல்பேசியால் பேசிக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர் தவறி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் வாலிபர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஏழுகிணறு தங்க சாலையில் வசிப்பவர் கிரண்ராஜ். இவரது மகன் ரவி (24). நேற்றிரவு ரவி தனது வீட்டில் நான்காவது தளத்திற்கு மேலே உள்ள மொட்டை மாடிக்கு சென்றார்.
அங்குள்ள தடுப்பு சுவரில் அமர்ந்தபடி செல்பேசியில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. தன்னை அறியாமலே பேசிக் கொண்டிருந்த அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். அப்போது சாலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் மீது வாலிபர் ரவி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. பலத்த காயம் அடைந்த ரவி, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ஏழுகிணறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.