1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

தமிழகத்திற்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி கிருஷ்ணா நீர்

ஆகஸ்ட் 3 ஆந்திர அரசு
சென்னை நகரின் குடிநீர் தேவையை நிறைவு செய்வதற்காக கண்டலேறு நீர் தேக்கத்திலிருந்து வருகிற 3 ஆம் தேதியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆகஸ்ட் முதல் வாரத்தில் கண்டலேறு நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டிக்கு கடந்த 20 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார்.

முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று ஆந்திர மாநில முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், சென்னை நகர மக்க்களின் குடிநீர்த்தேவையை நிறைவு செய்வதற்காகக் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடுவதற்குத் தெலுங்கு கங்கைத் திட்டத்தின் தலைமைப் பொறியாளருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
About Writer
Webdunia