1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்

ஏர் இந்தியா விமானம் அவசர தரையிறக்கம்
ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாரு காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்றிரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஏர் இந்திய விமானம் பாங்காக்கில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த போது விமானத்தில் இயந்திர கோளாரு இருப்பது தெரிய வந்தது. இது குறித்த, சென்னை விமான கட்டுப்பாட்டுக்கு விமான பயணி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விமானம் தரையிறங்க சென்னை விமான தளத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதையடுத்து, விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் விமானத்தில் இருந்த ஊழியர்கள் 14 பேரும், விமான ஓட்டுனர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
About Writer
Webdunia