2009-10 ஆம் ஆண்டில் வேளாண் கடனுக்கு ரூ.3,25,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது :2009-10 ஆண்டில் ரூ.3,25,000 கோடி வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2008-09 ஆம் ஆண்டில் இது 2,87,000 கோடியாக இருந்தது. இந்த இலக்கை எட்டுவதற்காக ரூ.3 லட்சம் வரையில் குறுகிய கால கடன் பெறும் விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு...