1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌விமான‌க் க‌ட்டண‌ உய‌ர்வா‌ல் ஹ‌ஜ் பயண‌க் க‌ட்டண‌ம் உயராது: ம‌த்‌திய அரசு!

விமானம் ஹஜ் மத்திய அரசு
விமான‌க் க‌ட்டண‌ உய‌ர்வா‌ல் ஹ‌ஜ் பயண‌க் க‌ட்டண‌ம் உய‌ர்‌த்த‌ப்படமா‌ட்டாது எ‌ன்று ம‌த்‌திய அரசு கூ‌றியு‌ள்ளது.

த‌ற்போது ‌விமான‌க் க‌‌ட்டண‌ம் அ‌திக அளவு உய‌ர்‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்றா‌லு‌ம் கட‌ந்த ஆ‌ண்டை‌ப் போலவே இ‌ந்த ஆ‌ண்டு‌ம் ஹ‌ஜ் பயண க‌ட்ட‌ம் ரூ.12,000 எ‌ன்ப‌தி‌ல் எ‌ந்த மா‌ற்றமு‌ம் இ‌ல்லை எ‌ன்று ‌பிரதம‌‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் தலைமை‌யி‌ல் நட‌ந்த ம‌த்‌திய அமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு செ‌ய்யப்ப‌ட்டு‌ள்ளது.

ஏ‌ற்கனவே உ‌ள்ள 16 ஹ‌ஜ் பயண புற‌ப்பா‌ட்டு மைய‌ங்களுட‌ன் இ‌‌ந்த ஆ‌ண்டு கூடுதலாக இ‌ந்தூ‌ரி‌ல் இரு‌ந்து‌ம் ஹ‌‌ஜ் பயண‌ம் புற‌ப்படு‌ம். இ‌ந்த ஆ‌ண்டு ஹ‌ஜ் பய‌ணிக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 1,15,000-‌ல் இரு‌ந்து 1,23,211 ஆக அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. ‌பு‌னித ஹ‌ஜ் பயண‌ம் அடு‌த்த மாத‌ம் தொட‌ங்கு‌கிறது எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.