மருத்துவமனையில் ஏ.பி.பரதன் அனுமதி!
உடல் நலக்குறைவால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீகாரில் வெள்ள சேதங்களை பார்வையிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலர் ஏ.பி. பரதன் நேற்று சென்றார். அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் பரூனி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தபோது, சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.