1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

வட‌கிழ‌க்‌கு மா‌நில‌ங்க‌ளி‌ல் ‌மித ‌நிலநடு‌க்க‌‌ம்!

‌‌ஷி‌ல்லா‌ங் அ‌ஸ்ஸா‌ம் கவுகா‌த்‌தி ‌நிலநடு‌க்க‌ம்
இ‌ந்‌தியா‌வி‌ன் வட‌கிழ‌க்கு மா‌நில‌ங்க‌ளி‌ல் இ‌ன்று காலை ‌மிதமான ‌நிலநடு‌க்க‌ம் ஏ‌‌ற்ப‌ட்டது. ‌ரி‌க்ட‌ர் அளவு கோ‌லி‌ல் இது 3.9 ஆக ப‌திவா‌கி‌யு‌ள்ளது.

இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் இ‌ன்று காலை 11.05 ம‌ணியள‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம், மேகாலயா‌த் தலைநக‌ர் ‌‌ஷி‌ல்லா‌ங்‌கி‌ல் இரு‌ந்து 210 ‌கிலோ ‌மீ‌ட்ட‌‌ர் தொலை‌வி‌ல் மைய‌ம் கொ‌ண்டிரு‌ந்ததாகவு‌ம் அ‌ம்மா‌நில ‌நிலநடு‌க்க‌விய‌ல் வா‌னிலை ஆ‌ரா‌ய்‌ச்‌சி‌க்கூட அ‌‌‌திகா‌ரிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மேலு‌ம், இ‌ந்த ‌நிலநடு‌க்க‌ம் அ‌ஸ்ஸா‌ம் தலைநக‌ர் கவுகா‌த்‌தி, ‌மேகாலயா‌த் தலைநக‌ர் ‌ஷி‌ல்லா‌ங் ம‌ற்று‌ம் அ‌ப்பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள ‌பிற இட‌ங்க‌ளிலு‌ம் உணர‌ப்ப‌ட்டது. ஆனா‌ல் சேத‌ம் எதுவு‌ம் ஏ‌ற்ப‌ட்டதாக தகவ‌ல் இ‌ல்லை எ‌ன்று‌ம் அவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.