புது டெல்லி: கோத்ரா கலவர வழக்குகளில் விசாரணை நடத்தி வரும் மத்திய புலனாய்வுக் கழகத்தின் (ம.பு.க.) முன்னாள் இயக்குநர் ஆ.கே. ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 வரை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.