1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அந்தமானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்!

போர்ட்பிளேர் வங்கக் கடல் அந்தமான்-நிகோபார் தீவு நிலநடுக்கம்
வங்கக் கடலில் உள்ள அந்தமான்-நிகோபார் தீவுப் பகுதியில் இன்று அடுத்தடுத்து 2 மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடித் தகவல் இல்லை.

இன்று மதியம் 1.50 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவானதாகவும், அதைத் தொடர்ந்து முற்பகல் 2.57 மணியளவில் ஏற்பட்ட 2வது நிலநடுக்கம் 5.2 ஆகப் பதிவானதாகவும் போர்ட்பிளேரில் உள்ள பேரிடம் மேலாண்மை கட்டுபாட்டு அறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போர்ட்பிளேரில் இருந்து 120 கி.மீ தொலைவில் தென்-கிழக்கு கடல் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் மையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.