1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சூர‌த்‌தி‌ல் வெடிகு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு!

குஜரா‌த் சூர‌த்‌ லடே‌ஷ்வ‌ர் ச‌ந்தோ‌ஷி
குஜரா‌த் மா‌நில‌ம் சூர‌த்‌தி‌ல் உ‌ள்ள குடி‌யிரு‌ப்பு‌ப் பகு‌தி‌யி‌ல் இ‌ன்று இர‌‌ண்டு வெடிகு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டன. இ‌ச்ச‌ம்பவ‌ம் பத‌ற்ற‌த்தை ஏ‌ற்படு‌த்‌தி உ‌ள்ளது.

லடே‌ஷ்வ‌ர் காவ‌ல் ‌நிலைய‌த்‌தி‌ற்கு அரு‌கி‌ல் வை‌‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ந்த வெடிகு‌ண்டை வெடிகு‌ண்டு வ‌ல்லுந‌ர்க‌ள் செய‌‌‌லிழ‌க்க‌ச் செ‌ய்தன‌ர். ச‌ந்தோ‌ஷி நக‌ர்‌ப் பகு‌தி‌‌யி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ம‌ற்றோரு கு‌ண்டை‌ச் செய‌லிழ‌க்க‌ச் செ‌ய்யு‌ம் ப‌ணி நடந‌்து வரு‌கிறது எ‌ன்று காவல‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

கட‌ந்த 27, 28 ஆ‌‌கிய தே‌திக‌ளி‌ல் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட இர‌ண்டு கா‌ர் கு‌ண்டுகளு‌ம் குடி‌யிரு‌ப்பு‌ப் பகு‌திக‌ளி‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு இரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

போ‌லி எ‌ண்களுட‌ன் இரு‌ந்த அ‌ந்த இர‌ண்டு கா‌ர்க‌‌ளிலு‌ம் ஏராளமான வெடி பொரு‌ட்களு‌ம், அவ‌ற்றை வெடி‌க்க‌ச் செ‌ய்வத‌ற்கான டைம‌ர்களு‌ம் இரு‌ந்தன.

இ‌ந்த‌க் கா‌ர் கு‌ண்டுகளை ஹ‌ீராபா‌க் பகு‌தி‌யி‌ல் ‌நிறு‌த்‌தியதாக‌ச் ச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌ம் பய‌ங்கரவா‌தி‌யி‌ன் வரைபட‌த்தை‌க் காவ‌ல்துறை‌யின‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளன‌ர்.

கா‌ர் கு‌ண்டு ‌நிறு‌த்த‌‌ப்ப‌ட்டிரு‌ந்த இட‌த்‌தி‌ற்கு அரு‌கி‌ல் உ‌ள்ள க‌ட்டட‌த்‌தி‌ன் காவலா‌ளி தெ‌ரி‌வி‌த்த ‌விவர‌ங்க‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் இ‌ந்த வரைபட‌ம் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளது.

இத‌ற்‌கிடை‌யி‌ல் அகமதாபா‌‌த் தொட‌ர் கு‌ண்டு வெடி‌ப்புக‌ளி‌ல் ப‌லியானோ‌ரி‌ன் எ‌ண்‌ணி‌க்கை இ‌ன்று 50 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளது.