பூடான் நாடளுமன்ற தேர்தலின் பாதுகாப்பு கருதி இந்திய-பூடான் எல்லைப் பகுதிகள் 36 மணிநேரம் மூடப்பட உள்ளது.பூடானில் வரும் 24-ம் தேதி நடக்க உள்ள பொது தேர்தலின் மூலம் 75 பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்தலையொட்டி, பூடான்- அஸ்ஸாம் எல்லை வரும் 23-ம் தேதி மாலை 6 மணிமுதல் 25-ம் தேதி காலை 6.00 மணிவரை மூடப்படுகிறது. பூடான் நாட்டில் தேர்தல் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பூடான்-...