1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஸ்ரீநக‌ரி‌ல் ஊடுரு‌விய 2 பே‌ர் கைது!

ஸ்ரீநக‌‌‌ர் க‌ர்னா பா‌கி‌ஸ்தா‌ன் கா‌ஷ்‌‌மீ‌ர் செ‌ட்போரா ந‌பீ‌த் அகமது அவா‌ன் அ‌ல்தா‌ப் அகமது
ஸ்ரீநக‌‌‌ர் க‌ர்னா பகு‌தி‌யி‌ல் இ‌‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் ஆ‌க்‌கிர‌மி‌ப்பு கா‌ஷ்‌‌மீரி‌ல் இரு‌ந்து அ‌த்து‌மீ‌றி நுழைய முய‌ன்ற இர‌‌ண்டு பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக காவ‌ல்துறை செ‌ய்‌தி தொட‌ர்பாள‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

க‌ர்னா பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள செ‌ட்போரா எ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல் எ‌ல்லை பாதுகா‌ப்பு ப‌‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டிரு‌ந்த ‌வீர‌ர்க‌ள், பா‌கி‌ஸ்தா‌ன் ஆ‌க்‌‌கிர‌மி‌ப்பு கா‌ஷ்‌‌மீ‌ர் பகு‌‌தி‌யி‌ல் இரு‌ந்து இர‌ண்டு பே‌ர் அ‌த்து‌மீ‌றி நுழைய முய‌ன்றதை பா‌ர்‌த்து அவ‌ர்களை சரணடையு‌மா‌று வ‌லியுறு‌த்‌தின‌ர்.

இதையடு‌த்து, அவ‌ர்க‌ள் சரணடை‌ந்தன‌ர். ‌விசாரணை‌யி‌ல், அவ‌ர்க‌‌ளது பெய‌ர் ந‌பீ‌த் அகமது அவா‌ன், அ‌ல்தா‌ப் அகமது எ‌ன்பது தெ‌ரியவ‌ந்தது. ‌பி‌ன்ன‌ர் அ‌வ‌ர்க‌ள் காவ‌ல்துறை‌ வச‌ம் ஒ‌ப்படை‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.