நாகலாந்து சட்டமன்றத் தேர்தல் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது.இன்று இலேசாக பனி பெய்து கொண்டிருந்தாலும் வாக்காளர்கள் உற்சாகமாக வாக்களிக்க வாக்குச் சாவடியில் வரிசையில் நின்றிருந்தனர். நாகலாந்து சட்டமன்றத்தில் 60 உறுப்பினர்களுக்கான வாக்குபதிவு தொடங்கியது. நான்கு பெண்கள் உட்பட, 218 பேர் போட்டியிடுகின்றனர். இந்த மாநிலத்தில் சுமார் 13 லட்சம் வாக்களார்கள் உள்ளனர். இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர்களான நிபியூ ரியோ (நாகலாந்து மக்கள் முன்னணி), கே.எல்.சிஷி (காங்கிரஸ்) ஆகியோருடன்...