1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌பீகா‌ர்: மு‌ன்னா‌ள் அமை‌ச்சரு‌க்கு ஆயு‌ள்!

பீகா‌ர் ஆயு‌ள் த‌ண்டனை லால‌ன் ‌சி‌ங் மு‌கியா ஆ‌தி‌த்ய ‌சி‌ங்
கொலை வழ‌க்‌கி‌ல் ‌சி‌க்‌கிய பீகா‌ர் மா‌நில மு‌ன்னா‌ள் கா‌‌ல்நடை பராம‌ரி‌ப்பு‌த் துறை அமை‌ச்ச‌ர் ஆ‌தி‌த்ய ‌சி‌ங் உ‌ள்பட 4 பேரு‌க்கு ஆயு‌ள் த‌ண்டனை ‌வி‌தி‌த்து ‌விரைவு ‌‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளது.

பீகா‌ர் மா‌நில‌ம் நவடா‌வி‌ல் லால‌ன் ‌சி‌ங் மு‌கியா எ‌ன்பவ‌ர் கட‌ந்த 2006 ஆ‌ம் ஆ‌ண்டு ஜனவ‌ரி 6 ஆ‌ம் தே‌தி சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌ட்டா‌ர். இது தொட‌ர்பாக மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் ஆ‌தி‌த்ய ‌சி‌ங் உ‌ள்பட 9 பே‌ர் ‌மீது வழ‌க்கு‌த் தொட‌ர‌ப்ப‌ட்டது.

இ‌ந்த வழ‌க்கு நவடா ‌விரைவு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல் இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தபோது, மு‌ன்னா‌ள் அமை‌ச்‌ச‌ர் ஆ‌தி‌த்ய ‌சி‌ங், நர‌சி‌ங்க ‌சி‌ங், தரு‌ண் ‌சி‌ங், முகே‌ஷ் ‌சி‌ங் ஆ‌கிய 4 பேரு‌க்கு‌ம் ஆயு‌ள் த‌ண்டனை ‌வி‌தி‌த்து ‌நீ‌திப‌தி ‌வி‌ஜ‌ய் ச‌ங்க‌ர் பதா‌க் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர்.

மு‌ன்னதாக, இ‌வ்வழ‌க்கு ‌விசாரணை‌க்கு வ‌ந்தபோது, கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட்ட 5 பே‌ர் போ‌திய ஆதார‌ங்க‌ள் இ‌ல்லை எ‌ன்ற காரண‌த்தா‌ல் ‌விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.