கர்நாடகா வனப்பகுதியில் கடந்த ஒரே மாதத்தில் ஒன்பது யானைகளை கொன்று தந்தம் கொள்ளையடிக்கப்பட்டது தமிழக வனத்துறை மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம் தாளவாடி, கேர்மாளம் வனப்பகுதியை அடுத்துள்ளது சாம்ராஜ்நகர் மற்றும் கொள்ளேகால் வனப்பகுதி. இது கர்நாடக மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளாகும். இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக வாழ்ந்து வருகிறது. குறிப்பாக காவிரி ஆற்றின் படுகையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக வசிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு...